கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சின்னதின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. கூலித் தொழிலாளி (55). இவரது 2&வது மனைவி துளசி. இவர்களுக்கு 7 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 2&வது மகள் முனியம்மாவுக்கும், ராயக்கோட்டையை சேர்ந்த மாதையனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் திருமணம் நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. முகூர்த்தத்துக்கு முதல்நாள் நள்ளிரவில் முனியம்மா மாயமாகி விட்டார். அவர் காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. முகூர்த்த நேரத்தில் மணப்பெண்ணை காணாமல் தவித்த உறவினர்கள், முனியம்மாவின் தங்கை சாலாவை மாதையனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி சாலா & மாதையன் திருமணம் நடந்தது.
ஆடி மாதம் பிறப்பதால் திருமணம் முடிந்த கையோடு சாலாவை பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு, மாப்பிள்ளை வீட்டார் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் முதல் சாலாவையும் காணவில்லை. இந்த தகவல் தெரிந்ததும் புதுமாப்பிள்ளை மாதையன் தவித்துப் போனார்.
Saturday, July 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment